ஆண்டுதோறும் கலை, அறிவியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து வருவதால், ஏற்கனவே உள்ள படிப்புகளுடன் புதிய படிப்பு களைத் தொடங்க கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ. பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், கணக்கு உள்ளிட்ட பாடங் களை கூடுதலாக தொடங்கவும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு அனுமதி கோரியும் விண்ணப் பிக்கப்பட்டுள்ளது. ஃபேஷன் டெக்னாலஜி, வொக்கேஷனல் பேங்கிங், ஃபைனான்ஷியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ், டூரிசம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலைப் படிப்புகளுக்கும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
உறுப்புக் கல்லூரிகள் புதிய பாடப்பிரிவுகளை தொடங்க மார்ச் 31-க்குள் அரசாணை மற்றும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.யின் தடையில்லாச் சான்று பெற்றால் மட்டுமே அனுமதி வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.