tamilnadu

img

நேரத்தில் வாக்களித்தால் உண்மை தெரிந்துவிடும் என பயப்படும் ஒரு வேட்பாளர்...!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சிபி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் பிரச்சாரத்தின் போது நான் கோவையில் குடியிருந்து வருபவன் என்னை எப்போது வேண்டுமானலும் சந்திக்கலாம் என பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அவர் திருப்பூரில் குடியிருந்து வருகிறார். அவருக்கு திருப்பூர் அரண்மனைபுதூர் வாக்கு சாவடியில் வாக்கு உரிமை இருக்கிறது. ஆனால் காலை திருப்பூரில் வாக்களித்தால் கோவையில் வசிப்பதாக பிரச்சாரம் செய்தது அம்பலமாகி கோவை தொகுதியில் தனக்கு எதிராக வாக்கு விழும் என்ற காரணத்தால் காலையில் வாக்களிப்பதைத் தவிர்த்தார். பிற்பகல் வரை கணிசமான வாக்குப்பதிவு முடிந்த பிறகு தன் சொந்த ஊரில் வாக்களித்தால் பாதிப்பு இருக்காது என கருதி அமைதியாக இருந்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த செய்தி பதிவேற்றம் செய்யும் வரையில் வாக்களிக்க வரவில்லை.

அதுமட்டுமல்ல... மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் கோவை தொகுதியில் இல்லை... அதே போல் அமமமுக வேட்பாளரும் கோவை தொகுதியில் இல்லை.. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களில் கோவை தொகுதியில் இருக்கும் ஓரே வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் மட்டுமே...

;