tamilnadu

தஞ்சையில் 30 இடங்களில் வாக்கு இயந்திரம் கோளாறு

தஞ்சாவூர், ஏப்.18- தஞ்சையில் 30 இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்காளர்கள் மிகவும் அவதியடைந்தனர். தஞ்சை அடுத்த அருள்மொழிப்பேட்டை, ஊராட்சிஒன்றியத் தொடக்கப்பள்ளியில், மயிலாடுதுறை லோக் சபா தொகுதிக்கான வாக்கு பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. காலை 9.15 மணி வரை 150 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதன்பின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஆனால் 11.45 மணி ஆகியும் இயந்திரத்தை சரி செய்யமுடியவில்லை. இதையடுத்து அந்த இயந்திரத்தை சீல்வைத்து வைத்து, புதியஇயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. இது குறித்துஅங்கிருந்த பூத் ஏஜண்ட்டுகளுக்கும் தெரிவிக்கப்பட் டது. அதன் பின்னர் 11.45மணிக்கு புதிய வாக்குப்பதிவுஇயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்கிடையில் இயந்திரத்தில் கோளாறு என அறிந்ததும் வாக்களிக்க வந்தவர் கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். பின்னர் மீண்டும்வாக்குப்பதிவு தொடங்கிய தகவல் அறிந்ததும் அவர்கள் வந்து வாக்களித்தனர். இதனால் இரண்டு மணி நேரம்வாக்குப்பதிவு நிறுத்தப்பட் டது. சிலர் இரண்டு மணி நேரமாக அங்கே காத்திருந்தனர். இதை போல தஞ்சாவூர் லோக்சபாவிற்கு உட்பட்ட தஞ்சையில் வடக்கு வாசல், தெற்கு வீதி, இ.பி,காலனி, யாக்கப்பா நகர், சுந்தரம் நகர், பூக்கார தெரு உள் ளிட்ட பட்டுக்கோட்டை, மன்னார்குடி, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவையாறு எனமொத்தம் 30 வாக்குசாவடிகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டன. இதனால் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.

;