எழுச்சி மிகு மறியல் போர்: தொழிலாளி வர்க்கம் ஆவேசம்
ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 9 - தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்பு களை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் வன பாதுகாப்புச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனி யார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்கள், தொழி லாளர், விவசாயிகள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், இடதுசாரிக் கட்சிகள், தொழிற் சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் புதன் கிழமை நடைபெற்றது. அதனொரு பகுதியாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், விவசாயிகள் ஐக்கிய முன்னணி, விவசாயிகள் சங்கம், விவசா யத் தொழிலாளர் சங்கம், மாதர், வாலிபர், மாண வர் சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கா னோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஏ. லாசர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து தலை மையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 600 விவசாயத் தொழிலாளர்கள், காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் செம்பியன் மாதேவி பஞ்சாப் நேஷனல் வங்கி முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். முருகையன் தலைமையில், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ. வடிவேல் முன்னி லையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கீழ்வே ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி கலந்துகொண்டார். மன்னார்குடி மன்னார்குடியில், தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். தம்பு சாமி தலைமை ஏற்றார். போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் ஜி முத்துக்கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி, அரசு போக்கு வரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தின் மண்டல தலைவர் ஏ. கோவிந்தராஜ், மன்னார்குடி செயலா ளர் மதிவாணன், சிபிஎம் நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் கே. ஜெய பால், சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் கே. பிச்சைக்கண்ணு, ஜி. கதிரேச பாண்டியன், மாதர் சங்கத்தின் நகரச் செயலாளர் எஸ். சகாயராணி, மாதர் சங்கம் தலையாமங்கலம் எஸ். புஷ்பா உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் வி.ரெத்தினம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், விவசா யிகள் ஐக்கிய முன்னணி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ. ஸ்ரீதர், தொமுச போக்குவரத்து சங்க மண்டல பொதுச் செய லாளர் எம். வேலுச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் ஜீவானந்தம், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சிவராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பொன்னுச்சாமி, விதொச மாவட்டச் செய லாளர் டி.சலோமி,
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம். மகாதீர், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங் கோடன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் வி.மு. வளத்தான், விவசாயிகள் சங்க தேசியக்குழு உறுப்பினர் மு.மாதவன், சிஐடியு மாவட்டத் தலை வர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். கந்தர்வகோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். கறம்பக்குடியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம். பாலசுந்தரமூர்த்தி தலைமை வகித் தார். இலுப்பூரில் நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு விச, விதொச நிர்வாகிகள் கே.எம்.சங்கர், எம்.ஜோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். பொன்னமராவதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் டி. அன்பழகன் தலைமையில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்ன தாக, காந்தி சிலையில் தொடங்கிய பேரணி, அண்ணாசாலை வழியாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி அறந்தாங்கியில் தபால் நிலையத்தை முற்று கையிட்டு நடந்த சாலை மறியல் போராட்டத்தில் எஸ். கவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். தஞ்சாவூர் தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் பேரணியாக புறப்பட்டுச் சென்று, தலைமைத் தபால் நிலையம் முன்பு சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் ராஜன், ஹெச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், யுடிசி மாவட்டச் செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவ ணன், தஞ்சை மாநகரச் செயலாளர் எம்.வடி வேலன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 252 பேர் கைது செய்யப்பட்டனர். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியக்குழு சார்பில், பேராவூரணி தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம். செல்வம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஊரணிபுரம் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு பேசினார். பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், பூதலூர் நான்கு ரோட்டில் ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூதலூர் வடக்கு ஒன்றியம், திருக்காட்டுப் பள்ளி அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் ஆர்.உதயகுமார், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் எஸ்.மெய்யழகன்
, மாதர் சங்கம் மாநிலக்குழு உறுப்பினர் பி.கலைச் செல்வி, வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் டி.வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். திருவையாறு பாரத ஸ்டேட் பாங்க் முன்பு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ராம், விதொச மாவட்ட தலைவர் ஆர். பிரதீப் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. அம்மாபேட்டை நால் ரோட்டில் இருந்து 85-க்கும் மேற்பட்டோர் ஊர்வல மாகச் சென்று தபால்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாதர் சங்கம் மாநிலத் தலை வர் வாலண்டினா, வி.தொ.ச மாநிலக்குழு உறுப்பி னர் கே.பக்கிரிசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் இ. வசந்தி, வி.ச ஒன்றியச் செயலாளர் கே. முனியாண்டி, வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகர், வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் யு.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பாபநாசம் பாபநாசம் அருகே, அம்மாபேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடை பெற்றது. மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா தலைமை வகித்தார். இதில் விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பி னர் பக்கிரிசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வசந்தி உட்பட பலர் பங்கேற்றனர். கும்பகோணம் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், எல்பிஎஃப் செல்வராஜ், ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம், ஏஐசிசி டியு மாநில துணைத்தலைவர் மதியழகன், எச்எம்எஸ் முருகே
சன், யுடியுசி மோகன் தாஸ் ஆகி யோர் தலைமை வகித்தனர். திருவிடைமருதூர் கடை தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு சேகர், ஐஎன்டியுசி துளசிராமன், விசிக அருமை துரை ஆகி யோர் தலைமை வகித்தனர். நீடாமங்கலம் நீடாமங்கலத்தில், பாரத ஸ்டேட் வங்கி எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.எஸ். கலிய பெருமாள் தலைமை ஏற்றார். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன், திருவாரூர் இந்திய தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர் டி. முருகையன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருவாரூர் நன்னிலம் ஒன்றியம், பேரளம் தபால் நிலை யம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினார். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜி. செல்வா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே. தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தியாகு ரஜினிகாந்த், மாவட்டக் குழு உறுப் பினர் ஜெ. முகமது உதுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவூர் தபால் நிலையம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் மாவட்டச் செயலா ளர் டி. முருகையன் துவக்கி வைத்தார். மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா. கோமதி தலை மையேற்று உரையாற்றினார். குடவாசல் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி தலைமை வகித்து, கோரிக்கையை விளக்கி உரை யாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி. சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் டி. லெனின், நகரச் செயலாளர் டி.ஜி. சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி தபால் நிலையம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு, விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர் தலைமை ஏற்று கோரிக்கைகளை
விளக்கி உரையாற்றினார். வலங்கைமான் தபால் நிலையம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ். இளங்கோவன் தலைமை வைத்தார். கும்பகோணம் ஒன்றியம் சுவாமிமலை இந்தி யன் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ராஜா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலா ளர் செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். திருவி டைமருதூர் தெற்கு ஒன்றியம் திருச்சேறையில், தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிவேல் தலைமை வகித்தார். கோட்டூர் கோட்டூர் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே. வேலவன் தலைமை ஏற்றார். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டி.தியாகரா ஜன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்தி ரன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.சிவ சங்கரி ஆகியோர் தலைமையில் போராட்டம் 4 ரோடு அருகே தபால் அலுவலகம் முன்பு நடை பெற்றது. இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர். மணிவேல், சிபிஎம் ஜெயங்கொண் டம் ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடாசலம் வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் எ.கந்தசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரம சிவம், மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் பி.பத்மா வதி, சிபிஎம் செந்துறை வட்டச் செயலாளர் கு. அர்ச்சுனன், ஆண்டிமடம் வட்டச் செயலாளர் எம். வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக அனைத்து சங்கத்தினரும் காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தேவாங்க நடுத்தெரு, தேவாங்க
முதலியார் தெரு வழியாக ஜெயங்கொண்டம் நான்கு ரோடு அருகே உள்ள தபால் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் அகஸ்டின், எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் ரங்கசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், ஹெட்எம்எஸ் மாவட்டச் செயலாளர் சின்னசாமி, யுடியுசி மாவட்ட நிர்வாகி கனி ஆகியோர் தலைமை வகித்தனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாநகரில் தென்னூர் மகாத்மாகாந்தி பள்ளி அருகில் இருந்து தொழிற்சங்க மாவட்டச் செயலாளர்கள் எல்பிஎப் ஜோசப்நெல்சன், சிஐ டியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட்நாராயணன், எச்எம்எஸ் ஜான்சன், ஏஐசிசிடியு ஞானதேசிகன், எல்.எல்.எப் தெய்வீ கன், யுடியுசி சிவசெல்வம் ஆகியோர் தலைமையில் புறப்பட்ட பேரணி, சாஸ்திரி ரோடு வழியாக பாஸ் போர்ட் அலுவலகத்தைச் சென்றடைந்தது. பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகை யிட முயன்ற தொழிற்சங்கத்தினரை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர். இதனால், தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பெண்கள் உள்பட 3,400 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத்தினரை அழைத்துச் செல்வதற்கு போதிய பேருந்தும், தங்க வைப்பதற்கு போதிய இடங்களையும் காவல்துறை யினர் ஏற்பாடு செய்யாததால் கைது செய்யப் பட்டவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும்
மேலாக சாலையிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள திருமண மண்ட பத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் மதிய உணவு வழங்காமல் அனைவரையும் விடுவித்தனர். ரயில் மறியல் திருச்சி ரயில்வே ஜங்சனில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் விவ சாயிகள் சங்கம் கே.சி.பாண்டியன், வாலிபர் சங்கம் லெனின், விவசாய தொழிலாளர்கள் சங்கம் தங்க துரை, மாற்றுத்திறனாளிகள் சங்கம் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தை வாலிபர் சங்கம் மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். காதிகிராப்ட் அருகில் இருந்து சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலா ளர் கோவி. வெற்றிச்செல்வம் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாக ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். ஆர்ப்பாட்டம் எல்ஐசி ஊழியர்கள் சங்கம் சார்பில் திருச்சி எல்ஐசி யூனிட் 1 இல் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க இணைச் செயலா ளர் பழனியாண்டி தலைமை வகித்தார். தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் பொன்மலை ஆர்மரிகேட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட துணைத்தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கோட்ட உதவி தலைவர்கள்
ராஜசேகர், பதுருதீன் ஆகியோர் உரையாற்றினர். ஜாக்டோ – ஜியோ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் நீலகண்டன், முனைவர்.பால்பாண்டி, நாக ராஜன், உதுமான்அலி, குமாரவேல், நவநீதன் ஆகி யோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பர சன் துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் நிறைவுரையாற்றினார். திருச்சி புறநகர் தா.பேட்டையில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெய சீலன் துவக்கி வைத்தார். மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் கனக ராஜ் தலைமையில் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலா ளர் சிவராஜன் துவக்கி வைத்தார். லால்குடியில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பால முருகன் தலைமையில் நடந்த போராட்டத்தை விவ சாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரன்
துவக்கி வைத்தார். திருவெறும்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் நடராஜன் தலைமையில் நடந்த போராட்டத்தை சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் துவக்கி வைத்தார். மணப்பாறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்த போராட்டத்தை விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் முகமதுஅலி துவக்கி வைத்தார். மருங்காபுரியில் விவசாய தொழி லாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் அண்ணா துரை தலைமையில் நடந்த போராட்டத்தை கட்டு மான சங்க மாவட்டச் செயலாளர் தியாகராஜன் துவக்கி வைத்தார். தொட்டியத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க துணைத்தலைவர் ராமநாதன் தலை மையில் நடந்த போராட்டத்தை சிபிஎம் ஒன்றிய செயலாளர் முருகேசன் துவக்கி வைத்தார். துறையூரில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சங்கிலிதுரை தலைமையில் நடந்த போராட்டத்தை மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கோமதி துவக்கி வைத்தார். உப்பிலியபுரத்தில் விவசாய தொழி லாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் நடந்த போராட்டத்தை விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைச் செயலா ளர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர்கள்
சங்க மாவட்டச் செயலா ளர் ஜெ.சுப்ரமணியன் தலைமையில் நடந்த போராட் டத்தை விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொருளாளர் பழநிசாமி துவக்கி வைத்தார். முசிறி யில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் நல்லுசாமி தலைமையில் நடந்த போராட்டத்தை சிஐடியு புறநகர் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ரஜினி காந்த் தலைமையில் நடந்த போராட்டத்தை மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா துவக்கி வைத்தார். வையம்பட்டியில் சிஐடியு ஒன்றிய செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் நடந்த போராட்டத்தை விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்தார். கரூர் ஜாக்டோ - ஜியோ கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு, வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம். செல்வராணி ஆகியோர் பேசினர். கரூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எல்பிஎஃப் மாவட்ட தலைவர் வி.ஆர். அண்ணாவேலு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம். ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்
கலா ராணி, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பழ. அப்பா சாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் கே.கந்தசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ். வடிவேலன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் கே.பழனிச்சாமி, ஏசிசிடியு மாவட்டச் செயலாளர் எம்.பால்ராஜ் உள்ளிட்டபலர் உரையாற்றினர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 இடங்களிலும், மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பும் மறியல் போராட்டம் நடைபெற்றது. செம்பனார்கோவில், கொள்ளிடம், தரங்கம் பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் கிழக்கு, குத்தாலம் மேற்கு ஆகிய மையங்களில் நடந்த மறி யல் போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். கொள்ளிடம் ஒன்றியத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ் தலைமையிலும், தரங்கம்பாடி ஒன்றியம் ஆயப்பாடி தபால் நிலையம் முன்பு, தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. சிம்சன் தலைமையிலும் நடைபெற்ற மறியல் போராட்டத் தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் கலந்து கொண்டார். செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின் தலைமையிலும், குத்தாலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அமுல் காஸ்ட்ரோ தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஒன்றியத்தில் வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் அறிவழகன் தலைமை யிலும், சீர்காழி இந்தியன் வங்கி முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கணேசன் தலைமையிலும், குத்தாலம் கிழக்கு ஒன்றியம், மங்கநல்லூர் கனரா வங்கி முன்பு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற பலர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.