tamilnadu

img

ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவில் திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர், ஏப்.10-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முடப்புளிக்காடு பகுதியில் ஏந்தல் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக் கம். அதேபோல இந்த ஆண்டும் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள்வண்ணமயில் வாகனம், காமதேனு வாகனம், பூதவாகனம், அன்ன வாகனம்,மயில் வாகனம், ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. திருவிழாவில் முக்கிய நாளான 18.4.2019 (வியாழக்கிழமை) அன்று அதிகாலை 3 மணி முதல் பால்காவடி, பன்னீர்காவடி, அக்னிகாவடி, தொட்டில் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். அன்றைய தினம் மாலை5 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளவுள்ளார். தேரோட்ட நிகழ்வை காண பல்வேறு கிராமங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 10-ம் திருவிழாவாக தீர்த்தவாரியும், 11-ம் திருவிழாவாக திருக்கல்யாணமும் இரவு தெப்ப உற்சவமும் 12-ம் திருவிழாவாக விடையாற்றி உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி பெ.சிதம்பரம் மற்றும் முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர்கள், சங்கரன் வகையறாக்கள் மற்றும் திருக் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்ற நிகழ்வில் நிர்வாக அதிகாரி, முடப் புளிக்காடு கிராமத்தார்கள், சங்கரன் வகையறாக்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

;