tamilnadu

img

எம்.செல்வராசை ஆதரித்து நாகையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

நாகப்பட்டினம், ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசைஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நாகை மாவட்டப் பகுதிகளில் தீவிரப் பரப்புரையாற்றினார். வேதாரணியம் வட்டம் நீர்முளைப் பேருந்து நிலையம் அருகில் ஸ்டாலின்பரப்புரையாற்றினார். தொடர்ந்து, வேளாங்கண்ணியில் பரப்புரையாற்றினார். அன்று மாலை 4.15.மணிக்கு, நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் வாசல் அருகே பரப்புரையாற்றினார் ஏராளமான பெண்களும் ஆண்களும் கூடியிருந்த கூட்டத்தில் அவர் பேசியபோது, ” விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்கள், பெண்கள் சிறு சிறு நகைகள் அடகு வைத்துப் பெற்ற கடன்கள் யாவும்தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை நாட்களும், ஊதியமும் உயர்த்தப்படும். மேலும் திமுக.தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மக்கள் நலன்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி.கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களித்து எம்.செல்வராஜை வெற்றிபெறச் செய்யுங் கள்” என்று ஸ்டாலின் பேசினார்.நாகைப் பரப்புரையை முடித்துக் கொண்டு கீழ்வேளூரில் உரையாற்றி விட்டுத்திருவாரூரில் தனது பரப்புரையை நிறைவுசெய்தார். நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்களுக்கு தி.மு.க.நாகைத் தெற்கு மாவட்டச்செயலாளர் என்.கெளதமன் தலைமை வகித்தார். சி.பி.எம். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, சி.பி.ஐ.மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன்(தி,மு,க.), மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பல்வேறு கட்சித் தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் மா.மீ.புகழேந்தி, மகாகுமார், மா.மீனாட்சி சுந்தரம், இல.மேகநாதன், என்.வி.காமராஜ், கா.வீரசேகரன், ஜி.கே.கனகராஜ், ஏ.எஸ்.மோகன், வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், எம்.ஓ.எம்.செய்யதுஅலி, ஏ.எம்.ஜபருல்லா, சி.பி.ஐ. நாகை ஒன்றியச் செயலாளர் கோ.பாண்டியன், சி.பி.எம். நாகைநகரச் செயலாளர் எம்.பெரியசாமி உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

;