tamilnadu

img

திருச்சி: ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு 

திருச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் காயம் அடைந்த உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கியது.  இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆட்சியர் சு. சிவராசு தலைமை வைத்தார். திருச்சி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், கோட்டாட்சியர் தவச்செல்வம், வட்டாட்சியர் செல்வ கணேஷ், பிடிஒக்கள் லலிதா, ஜான்கென்னடி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பச்சை கொடியை அசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் மாடுகளுக்கு கால்நடை மாவட்ட இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையில் பரிசோதனைகளும் மாடுபிடி வீரர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனையும் சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு காளையை கொண்டு வந்தபொழுது ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் (30) என்பவர் மீது மாடு பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.