tamilnadu

img

சத்திரம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் தனியார் ‘எனக்கு தெரியாது‘ நழுவும் அதிகாரி

திருச்சிராப்பள்ளி, நவ.19- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் திருச்சி மாநக ராட்சி உதவி ஆணையரிடம் (கணக்கு பிரிவு) திங்களன்று கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது:  சத்திரம் பேருந்து நிலைய பகுதி களில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற் கான மேற்கூரை, பாதுகாப்பு, வசதி கள் எதையும் ஏற்படுத்தாமல் அந்த பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்க ளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரால் 1 மணி நேரத்திற்கு என கட்டணம் வசூலிப்பது ஏற்புடைய தாக இல்லை.  பெரும் வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியில் வாடிக்கையாளர்க ளுக்கு வாகன நிறுத்த வசதியை செய்து தர உரிமையாளர்களுக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியது யார்? ஆகவே மக்களை வஞ்சிக்கும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.  அது போல மாநகர பகுதிகளில் கேட்பாரற்று மாடுகள் கூட்டம், கூட்ட மாக சாலைகளில் திரிவதும், படுத்து உறங்குவதுமாக உள்ளது. இதனால் அதிகமான விபத்துகள் நடைபெறு கிறது. இதனை உடனடியாக கட்டுப் படுத்திட நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக்கொள்கிறோம் என அவர் அந்த மனுவில் தெரிவித்தி ருந்தார். ஆர்ப்பாட்டம் மனுவை பெற்றுக் கொண்ட உதவி ஆணையர் (கணக்கு பிரிவு) சத்திரம் பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனத்திற்கு கட்டணம் வசூல் செய்வது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரி வித்தார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட தலை வர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ஜெய்குமார், மாநிலக்குழு உறுப்பி னர் வினோதினி, மாவட்ட துணைத் தலைவர் கிச்சான், செயற்குழு உறுப்பினர் சேதுபதி, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, அஜீத், ஏழுமலை ஆகியோர் சத்திரம் பேருந்து நிலை யம் சென்றனர்.  அங்கு அவர்களின் வாகனத்தி ற்கு கட்டணம் செலுத்தச் சொல்லி  தனியார் ஒப்பந்த ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எவ்வித முன்ன றிவிப்பும் இன்றி எவ்வித பாது காப்புமின்றி வணிக நிறுவனங்க ளுக்கு வரும் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தை கண்டித்தும், வாகன நிறுத்த கட்ட ணத்தை உடனே கைவிட வேண்டும். ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து அங்கு வந்த கோட்டை காவல்துறையினர் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் செவ்வாய் அன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பது என தெரிவித்தார். இத னையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.  

வாகன நிறுத்த கட்டணம்  வசூலிப்பதை கைவிட வேண்டும் : சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாநகராட்சியில் சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு மேற்கூரை அமைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல்வாதிகளிடம் எவ்வித கருத்தையும் கேட்காமல் மிகப்பெரிய குளறுபடியாக அமைக்கப்பட்ட மேற்கூரையை தற்போது அகற்றி அந்த இடத்தில் ஸ்மார்ட் சிட்டி புதிய பேருந்து நிலையம் அமைப்பது ஏற்புடையதல்ல. மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படாமலேயே காலம் தாழ்த்தப்படுகிறது.  இந்நிலையில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாமலும், பொதுமக்களை அலைக்கழிக்க கூடிய வகையில் பேருந்து நிறுத்தங் களை ஏற்பாடு செய்திருப்பது பொருத்தமானது இல்லை. நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்க ளும் அலைக்கழிக்கப்படும் விதத்தில் பேருந்து நிலைய மாற்று ஏற்பாடுகள் பொருத்தமானதல்ல. இதனால் பள்ளி மாணவ, மாணவி கள், பெண்கள், வயதானவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 1 மணி நேரத்திற்கு ரூ 5, நான்கு சக்கர வாக னங்களுக்கு ரூ 20 என்ற மிகப் பெரிய மோசடி ஒப்பந்தத்தை மாநகராட்சி அமல்படுத்தியது நியாயமற்றது. எனவே பேருந்து நிறுத்தங்களை முறைப்படுத்தி வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள் பிழைப்பு நடத்துவதற்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மேலும் வாகன நிறுத்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் அந்த செய்திகுறிப்பில் தெரிவித்திருந்தார்.

;