tamilnadu

img

தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றிடுக - மாதர் சங்கம்

 தருமபுரி, செப்.21- தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு சனியன்று நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தருமபுரி நகர பேரவைக் கூட்டம் சனியன்று தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இப்பேரவைக்கு நகரத் தலைவர் ரங்கநாயகி தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, பொருளாளர் பி.ராஜாமணி, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, மாவட்டச் துணைச்செயலாளர் கே.சுசிலா, ஒன்றியச் செயலாளர் மீனாட்சி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இப்பேரவையில், தருமபுரி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் இருதயம், நரம்பியல் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் துவங்கப்பட வேண் டும். அரசு மருத்துவ மனையில் மருத்து வர், செவிலியர் மற்றும் ஊழியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும். தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். ஏழை கூலி தொழி லாளர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். பெண்களுக்கு சுய தொழில் தொடங்க அரசுடமை யாக்கப்பட்ட வங்கிகள் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  
புதிய நிர்வாகிகள் தேர்வு 
இப்பேரவையில் சங்கத்தின் நகரத் தலைவராக ரங்கநாயகி, செயலாள ராக நிர்மலாராணி, பொருளாளராக சுபா, துணைச் செயலாளராக யாஸ் மீன், துணைச் செயலாளராக கவிப் பிரியா உள்ளிட்ட 11பேர் கொண்ட நகரக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

;