உதகை, ஜூன் 15- நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது வேலிவியூ பகுதி பொதுமக் கள் சிலர் அப்பகுதியில் அனு மதியில்லாமல் அமைக்கப் பட்ட கடைகளை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டு மென திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவி டம் மனுஅளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் குறிப்பிட்டுள் ளதாவது, நாங்கள் வசிக்கும் வேலிவியூ பகு தியில் தனிநபர் ஒருவர் எவ்வித அனுமதி யும் பெறாமல் இரவோடு இரவாக கடை ஒன்று அமைத்துள்ளார். இதனால் மழைக் காலங்களில் இப்பகுதியில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது. ஏற்கனவே இப்பகுதி யில் இரண்டு வீடுகள் மண்சரிவு ஏற்பட்டு இடிந்து தரைமட்டம் ஆனது. இந்நிலையில் மீண்டும் இப்பகுதியில் மண்ணை தோண்டி கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் ஓடும் நீர் அனைத்தும் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட கடையை அப்புறப்படுத்த தகுந்த நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனு வில் குறிப்பிட்டிருந்தனர்.