tamilnadu

img

நடிகர் ராஜசேகர் காலமானார்

சென்னை,செப்.8 பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ராஜ சேகர் உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயி றன்று (செப்.8)  கால மானார் தமிழில் ‘பாலை வனச்சோலை’ உள்ளிட்ட படங்களை இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகர் இயக்கியுள்ளனர். அவர்களில் ராஜசேகர் முக்கியமானவர்.பின்னர் அவர் தனித்து சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு மற்றும் பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.      பின்னர் நடிகராகவும் மாறிய அவர் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடலான ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடலில் இவர் நடித்திருந்தார். சமீப காலமாக அவர் தொலைக்காட்சி நாடகங்களில்  நடித்து வந்தார். உடல்நலக்குறை வால் போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிறன்று  காலமானார்.