பாபநாசம், ஏப்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம், வலங்கைமான் முன்னாள் தாலுகாச் செயலாளரும், மூத்த தோழருமான கனகசபை பாண்டியன் ஞாயிறன்று காலமானார். அன்னாரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், கே.பக்கிரி சாமி, என்.சிவகுரு, மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.காதர் உசேன், ஒன்றியச் செயலாளர் வி.முரளிதரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.