அரியலூர், மார்ச் 29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆமணக்கந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் தியாக ராஜனின் தந்தை தங்கசாமி செவ்வாயன்று காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, மூத்த தலைவர் ஆர்.சிற்றம்பலம், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம், மற்றும் டி.அம்பிகா, வி.பத்மாவதி, எ.அருண்பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர்.