சென்னை, மார்ச் 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுப்பதில் அரும்பாடுபட்ட தோழர் ‘பர்மா ஷெல்' வி.கே கிருஷ்ணன் ஞாயிறன்று (மார்ச் 26) கேரளாவில் காலமானார். அவருக்கு வயது வயது 98. சென்னை பர்மா ஷெல் நிறு வனத்தில் முதன்மை சந்தையிடல் மேலாளராக பணிபுரிந்தவர் தோழர் ‘பர்மா ஷெல்' வி.கே கிருஷ்ணன். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, மார்க்சிஸ்ட் கட்சி உரு வானபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சி பணி களில் துடிப்போடு செயலாற்றி சென்னை மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதிலும், அவசரநிலை காலத்தில் தலைவர்களை பாது காப்பதிலும் பெரும் பங்காற்றினார். அன்னாரது மறைவையொட்டி திங்களன்று (மார்ச் 27) சென்னை கேரள சமாஜத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், கேரள சமாஜம் நிர்வாகிகள் டி.அனந்தன், கும்பளங்காடு உன்னி கிருஷ்ணன், மாத்யூ, சந்திரசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.