tamilnadu

img

‘கும்பகோணத்தில் மணல் குவாரி அமைத்திடுக!’

கும்பகோணம், ஆக12- கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு அங்கீ கரிக்கப்பட்ட மணல் குவாரிகளில் கட்டு மான பணிகளுக்கு மணல் எடுத்துச் சென்று தனது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர். ஆனால் தற்போது மணல் குவாரி நிறுத்தப்பட்டது இத னால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட சிஐடியு சார்பாக  தாராசுரம் கடிச்சம் பாடி பகுதிகளில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரவை கூட்டம் நடை பெற்றது. தாராசுரத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்திற்கு முருகன் தலைமை ஏற்றார் அதில் கும்ப கோணம் தெற்குப் பகுதி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க பொறுப்பாள ராக ஜெ.முருகன் தலைவராகவும் பாஸ்கர் செயலாளராகவும் ஜி முரு கன் பொருளாளராகவும் தேர்வு செய் யப்பட்டனர். அதேபோல் லட்சுமணன் தலைமை யில் நடைபெற்ற கடிச்சம்பாடி பேர வைக் கூட்டத்தில் கும்பகோணம் வடக்குப் பகுதி பொறுப்பாளர்களாக லட்சுமணன் தலைவராகவும் ஜே செந்தில் செயலாளராகவும் கே உலக நாதன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர் பேரவையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் பொருளாளர் ம.கண்ணன் முறை சாரா மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார் மாவட்ட துணை செயலாளர் பி.ஜேசுதாஸ் எவர்சில்வர் தொழி லாளர் சங்க தலைவர் ஏசெல்வம் செய லாளர் எஸ்விமணி கைத்தறி சங்க பொறுப்பாளர் கேஆர்சந்திரன் விவ சாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஏரா ளமான கலந்து கொண்டனர்.  பேரவையில் கும்பகோணம் பகுதி யில் ஆற்றில் ஒரு பொதுவான இடத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கட்டி டப் பணிக்கு மணல்  எடுத்துச் செல்ல மணல் குவாரி அமைக்க வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது காவல்துறை போடப்படும் பொய் வழக்கு மற்றும் கைது போன்ற நடவடிக்கை யை கைவிட வேண்டும் என்றும் டாரஸ் லாரி உள்பட கனரக வாகனங்களில் பகிரங்க மணல் கொள்ளையை தடுத்து மணல் கடத்தல் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதனை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு பாபநாசம் கும்ப கோணம் திருவிடைமருதூர் பகுதி களில் உள்ள மாட்டுவண்டி தொழிலா ளர்கள் சார்பில் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.