tamilnadu

img

ஜே.சி.குமரப்பா நினைவு தினம்  

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காந்திய பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி.குமரப்பாவின் 60 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர் பிச்சை முன்னிலை வகித்தார். நினைவு அஞ்சலி கூட்டத்தில் மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.  நிகழ்ச்சியில், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் மாநில துணை பொதுச் செயலாளரும், பள்ளித் தாளாளருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் பேசுகையில், “மாணவர்கள் குமரப்பா போன்ற மகான்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, தங்களது முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் பாதுகாப்பு, நிலத்தடி நீர் சிக்கனம், பிறருக்கு இன்னல் தராத முன்னேற்றம் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். தேச நலனை முன்னிறுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார்.  குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் ஸ்ரீதர், உறுப்பினர்கள் மா.ராமு, மா.கணபதி, சி.ஆனந்தன், நபிஷா பேகம்,  ஆசிரியர்கள் மூர்த்தி, ராஜேஷ், அரவிந்தன் உள்ளிட்டோர் குமரப்பாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் காந்திய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.