பண்ணை அடிமை முறைக்கு எதிராக தொடர்ந்து போராடிய மக்கள் போராளி தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் நகரக் குழு சார்பில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், ஏ.பிரகாஷ் மற்றும் ஒன்றிய-நகர குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.