districts

img

தியாகி சிக்கல் பக்கிரிசாமி நினைவு தினம்

நாகப்பட்டினம், நவ.16- நாகப்பட்டினம் மாவட்டம் சிக்  கல் கடை தெருவில் தியாகி சிக்கல் பக்கிரிசாமியின் 55 ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.சி.  பழனிவேல் கலந்து கொண்டார். நாகை வடக்கு ஒன்றிய செயலா ளர் வி.வி.ராஜா தலைமை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்  கல் ஊராட்சியை சேர்ந்தவர் தியாகி பக்கிரிசாமி. 1960-களில் நிலவி  வந்த உச்சக்கட்ட பண்ணையடி மைத்தனத்தையும், கூலி உயர்வுக் கான போராட்டத்தையும் முன் னின்று களம் கண்டவர். நாகை தாலுகாவில் உள்ள பெரும் பண்  ணையர்களுக்கு சிம்ம சொப்பன மாக விளங்கியவர். விவசாயிகளை யும், விவசாய தொழிலாளர்களை யும் ஒருங்கிணைத்து செங்கொடி யின்கீழ் பலகட்ட போராட்டங்களை நடத்தினார்.  காவிரியின் கடைமடை பகுதி யான நாகையில் செங்கொடி இயக்  கம் வீறு நடை போட்டு வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், அதைப்  பொறுத்துக் கொள்ளாத ஆதிக்க வர்க்க பண்ணையார்கள் செங் கொடியின் புதல்வர்களில் முன் நிற்  பவர்களை வேட்டையாட துடித்த னர். அப்படி களத்தில் முன்நின்று போராடிய மாவீரன் சிக்கல் பக்கிரிசாமி. 1968 நவம்பர் 16 அன்று இயக்கப் பணிக்காக நாகை சென்று திரும்பி வந்த சிக்கல் பக்கிரிசாமி வர்க்க  எதிரிகளால் படுகொலை செய்யப் பட்டார். அவரின் 55 ஆவது நினைவு  தினம் சிக்கல் கடை தெருவில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ் வில் முதுபெரும் தலைவர் ஆர்.சி. பழனிவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முருகையன், ப.சுபாஷ் சந்திர போஸ், என்.எம். அபூபக்கர், நாகை தெற்கு ஒன்றிய  செயலாளர் ஏ.வடிவேல், தலை ஞாயிறு ஒன்றிய செயலாளர் ஏ. ராஜா, சிக்கல் ஊராட்சி மன்ற தலை வர் விமலாராஜா, மாவட்ட குழு, இடைக்கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.