tamilnadu

img

“தமிழ்நாடு தினம்” சிறப்பு கருத்தரங்கம்

“தமிழ்நாடு தினம்” சிறப்பு கருத்தரங்கம்

வேலூர், ஜுலை 18- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி தமிழ்  துறை இணைந்து “தமிழ்நாடு தினம்”  என்ற சிறப்பு கருத்தரங்கை நடத்தின.  கல்லூரி முதல்வர் எபினேசர் தலைமையில் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில்  தமிழ்த்துறைத்தலைவர் கல்பனா அனைவரையும் வரவேற்றார். பேரா.சம்பத்குமார் தொகுத்து வழங்கினார். தமுஎகச மேனாள் தலைவர் முல்லைவாசன் கருத்துரை வழங்கினார். இதனையொட்டி நடத்தப்பட்ட  கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிளை செயலர் ருத்ரபாரதி நன்றி கூறினார். இந்நிகழ்வில் இரு நூறு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.