tamilnadu

img

வாலிபர் சங்கத்தின் புதிய கிளை கூட்டம்

வாலிபர் சங்கத்தின்  புதிய கிளை கூட்டம்

பெரம்பலூர், அக். 6-  பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் எம்.ஜி.ஆர் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துளை சாலை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ச. மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்டப் பொருளாளர் புவனேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதிய கிளை தலைவராக ஆர். ராமு, செயலாளராக வெற்றி, பொருளாளர் நாகராஜ் உள்ளிட்ட 7 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பாடலூர் தேசிய நெடுஞ்சாலை முதல், அம்பாள் நகர் வரை சேதமடைந்துள்ள தார் சாலையை சீரமைத்து கால்வாய் அமைத்து தர வேண்டும். பாடலூர் எம்ஜிஆர் பகுதிக்கு சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும். எம்ஜிஆர் நகர் பகுதிக்கு விளையாட்டுத் திடல் அமைத்துத் தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.