அமைச்சர் சேகர்பாபுவுக்கு தொழிலாளர் சங்கத்தினர் நன்றி
சென்னை, அக். 18 - தமிழ்நாடு திருக்கோயில் தொழிலா ளர்கள் யூனியன் மாநாடு அக்.11 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநாட்டின் கோரிக் கையை ஏற்று அறநிலையத் துறை கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய 1500 தொகுப்பூதிய பணியாளர்களை விரைந்து நிரந்தரம் செய்யப்படுவார்கள்.வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்த வேண்டும், யூனியனுக்கு சென்னையில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். கோயில் வருமானத்தில் இருந்து சம்பளம் வழங்குதல், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பதவி உயர்வின்போது துறைத் தேர்விலிருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். இதனைதொடர்ந்து யூனியனின் சென்னை கோட்டத் தலைவர் தன சேகர், செயலாளர் தாம்பரம் ரமேஷ், பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலை வர்கள் ஈஸ்வரன் குருக்கள், வியாசர்பாடி மனோகரன், சூளை கலைவேந்தன், பெரம்பூர் கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகி கள் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
 
                                    