நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும்
மாதர் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை
கிருஷ்ணகிரி, ஆக.7- நுண் நிதி நிறுவனங்களி டமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் 14வது மாவட்ட மாநாடு கிருஷ்ணகிரி மருத்துவர் அண்ணாஜி நினைவகத்தில் நடைபெற்றது. துணைச் செயலாளர் கவிமணிதேவி தலைமையில் சகோதரி எஸ்.ரம்யா கொடியேற்றினார். ஓசூர் மாநகர தலைவர் வள்ளி அஞ்சலி வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா துவக்க உரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் டி.எம்.ராதா வேலை அறிக்கை வாசித்தார். நீதிக்காக போராடும் அமைப்பு பொதுச் செயலாளர் ராதிகா பேசுகையில், “நுண்நிதி நிறுவனங்கள் அரசு வங்கியில் இருந்து குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அநியாய வட்டிக்குக் கொடுத்து அடாவடியாக வசூல் செய்து பல குடும்பங்களையும் சிரமத்திற்கு உள்ளாக்கியும் நாசப்படுத்தியும் உள்ளது. இதிலிருந்து பெண்களைப் பாதுகாத்திட அரசிடம் போராடி நுண் நிதி நிறு வனங்களிலிருந்து பெண்க ளின் பாதுகாப்புக்குத் தனிச் சட்டம் இயற்றச் செய்தது மாதர் சங்கம்,” என்றார். “குறிப்பாக பெண் குழந்தைகள் கடும் பாதிப்பு களுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு பயனற்றிருந்த நிலையில், மாதர் சங்கம் போராடியே அதற்கு ஆணையரை நிய மித்திடச் செய்தது. பெண்கள் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை களைத் தடுத்திட மகளிர் காவல் நிலையங்களை அமைத்திட வேண்டும் என்று தொடர்ந்து போராடி, தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மகளிர் காவல் நிலையம் அமைக்க வைத்தோம்,” என்றார். “கோயம்புத்தூர், பள்ளி பாளையம், பொள்ளாச்சி பகுதிகளிலும் ஈசா யோகா மையத்தில் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமைகள் துன்புறுத்தல்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டபோது தொடர்ந்து போராடி வழக்குப் போட்டு நீதி கிடைத்திடச் செய்தது மாதர் சங்கம்,” என்றார். மாநில துணைத் தலைவர் எம்.கிரிஜா பேசுகையில், “உலகில் மூன்று பெண்களில் ஒரு வர் வரதட்சணைக் கொடு மையால் துன்புறுத்தப் படுகின்றனர். பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்ற பெண்கள் சிறுமிகள் குழந்தைகள் 90 சதவீதத்தினர் அருகில் பணியிடம், குடியிருப்பு, பள்ளி உள்ளிட்ட பகுதி களில் நெருக்கமாக உள்ள வர்களாலேயே கொடு மைகளுக்கு ஆளாகின்ற னர்,” என்றார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சிஐடியூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிர காஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.வட்டப் பொரு ளாளர் ஜி.சசிகலா நன்றி கூறினார். தீர்மானம் பெண்களைப் பாது காப்பதற்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்ற சட்டரீதியான புகார் கமிஷன் பெண்கள் மற்றும் சிறுமிகள் சம்பந்தப்பட்டிருக்கும் பொது இடங்களில் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும், விசாரணைக் கமிட்டி அமைக்க வேண்டும், காவல் நிலையங்களில் பெண்க ளுக்கு எதிரான தாக்கு தல்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வதைத் தடுக்க வேண்டும், பெண்களுக்கு நகரம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் 100 நாள் வேலை கட்டாயம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிர்வாகிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக எஸ்.ரம்யா, செயலாளராக டி.எம்.ராதா, பொருளாளரக கவிமணி தேவி உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.