tamilnadu

img

சாலையை சீரமைக்கக் கோரி பெண்கள் போராட்டம்

சாலையை சீரமைக்கக் கோரி பெண்கள் போராட்டம்

சென்னை, அக். 7- ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 27ஆவது வார்டு சோழம்பேடு பிரதான சாலை பிள்ளையார் கோவில் முதல் குறுக்கு தெருவில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு இங்கு சாலை அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அந்த சாலை சேறு சகதியுமாக காட்சியளிக்கின்றன. பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டி கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை அதி காரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள பெண்கள் சாலை அமைக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் வெங்கடேசன் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதை ஏற்க மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் சாலையை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதை அனைவரும் கலைந்து சென்றனர். பாலாற்று தடுப்பணையில் மாற்றுத்திறனாளிமூழ்கி பலி வேலூர், அக்.7- கவசம்பட்டு பாலாற்று தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி குபேந்திரன் (53) திங்களன்று நீரில் மூழ்கி  உயிரிழந்தார். கீழுர் பகுதியைச் சேர்ந்த கூலி வேலை யாள் குபேந்திரன், புதிதாக கட்டப்பட்டுவரும் தடுப்பணை யில் குளிக்கச் சென்றபோது, நீண்ட நேரம் கரைக்கு வராததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் வர தாமதமானதால், உள்ளூர் நீச்சல் வல்லுநர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் உடலை மீட்டனர். தீயணைப்புத் துறையினர் உரிய நேரத்தில் வராததை கண்டித்து, உறவினர்களும் ஊர் மக்களும் கவசம்பட்டு-விரிஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் பலராமன், காவல்ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.இதே தடுப்பணையில் கடந்த ஜூன் 2ஆம் தேதி 10 வயது சிறுவன் ஒருவரும் மூழ்கி உயிரிழந்திருந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறைக்கு அனுப்பப்பட்டது.