tamilnadu

img

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 7,000 கன அடி நீருக்கு மேல் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, ஞாயிறு (அக்.12) காலை 9 மணி முதல் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி திறந்துவிடப்படும். மழையின் அளவைப் பொறுத்து மேலும் உபரி நீர் கூடுதலாக வெளியேற்றப்படலாம். எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என நீர்வளத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.