tamilnadu

img

வத்தல்மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

வத்தல்மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

தருமபுரி, செப்.5- வத்தல்மலையை சிறந்த சுற்று லாத் தலமாக மாற்ற நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் வத்தல்மலை யும் ஒன்றாகும். கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரான சேர்வராயன் மலைப்பகுதியில், கடல் மட்டத்திலி ருந்து சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், இதனை ‘மினி ஏற்காடு’ என அழைக்கின்றனர். வத் தல்மலை சுமார் 225 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. இந்த மலையில் மொத்தம் 24 கொண்டை  ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு  ஆண்டின் பெரும் பகுதியில், குளிர்ந்த காலநிலை நிகழ்கிறது. இங்கு காப்பி, மிளகு, ஆரஞ்சு மற் றும் பலா சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள மக்கள் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடு பட்டு வருகின்றனர். இயற்கை எழி லோடு ரம்யமாக காணப்படும் இப்ப குதியில், ஊரக வளர்ச்சித்துறை மற் றும் வனத்துறை சார்பில், தார்ச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு துவக்கத்தில் இப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க தமி ழக அரசு முடிவு செய்தது. அதற்காக  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், தற் போது வரை எந்த வளர்ச்சித்திட்டங் களையும் தொடங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே, வாகன நிறுத்தம், சிறுவர் பூங்கா, அங்குள்ள ஏரியில் படகு சவாரி ஆகிய வசதிகளை ஏற்படுத்தி, வத் தல்மலையை சிறந்த சுற்றுலாத் தல மாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.