tamilnadu

img

ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

 ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

கடலூர், செப்.16 - ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. இச்சங்கத்தின் மூன்றாவது மாநாடு கடலூர் புதுப்பாளையத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ஆர். சுப்பிரமணியம் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலத் துணைத் தலைவர் ஆர்.நடராஜன் பேசினார்.   மாவட்ட செயலாளர் கோ.ஆதவன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். நிதி நிலை அறிக்கையை மாவட்ட பொருளாளர் பா.பத்மநாபன் சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் என்.காசிநாதன், ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்டத் தலைவர் கே. சண்முக சிகாமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர். மனோகரன், தலைவர் டி.புருஷோத்தமன், வி.நாகராஜன் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில கவுரவத் தலைவர் மு.பரமேஸ்வரன் பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து முற்றிலும் பணம் இல்லாத சிகிச்சை முறையை கொண்டு வர வேண்டும், 70 வயது பூர்த்தி யான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.