tamilnadu

img

கார்ப்பரேட் நிறுவனங்களின் காவலன் ஒன்றிய அரசு மின் ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சுதீப்தத்தா குற்றச்சாட்டு

கார்ப்பரேட் நிறுவனங்களின் காவலன் ஒன்றிய அரசு  மின் ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சுதீப்தத்தா குற்றச்சாட்டு

புதுச்சேரி, செப்.34- ஒன்றிய பாஜக அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் காவலனாக செயல்பட்டு வருகிறது என்று இந்திய மின் ஊழியர் கூட்ட மைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதீப்தத்தா குற்றம்சாட்டி னார். அரசுக்கு வருவாய் வரக்கூடிய அனைத்து துறைகளையும் ஒன்றிய பாஜக அரசு, தனி யார் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு தாரை வார்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின்துறையையும் தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திற்கு தாரை வார்க்க கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் முனைப்பு காட்டி வருகிறது. அதானி நிறுவனம் முயற்சி  இந்த நிலையில், புதுச்சேரி மின்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் அரசுக்கு சொந்தமான சொத்துக்களையும், விவசாய விளை நிலங்களை யும், வளங்களையும் கொள்ளையடிக்க பெறும் நாசகர திட்டத்தோடு அதானிக்கு சொந்தமான நிறு வனம் (அதானி எலக்ட்ரி சிட்டி புதுச்சேரி லிமிடெட்) பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் சங்கங்க ளின் சார்பில் ஒருங்கி ணைந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வு கூட்டம்  இந்நிலையில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உள்ளடக்கிய தென்மாநிலங்களின் மின்சார வாரிய தொழிற் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் புதுச்சேரி மின்துறை தனியார்மய மற்றும் கார்பரேசன்மய எதிர்ப்பு போராட்டக் குழுவின் சார்பில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் புதனன்று (செப்.24) புதுச்சேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மின்துறை தனியார்மய எதிர்ப்பு குழுவின் பொதுச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். போராட்டக் குழுவின் ஆலோசகர் ஜி.ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் உரையாற்றிய  மின் ஊழியர் கூட்ட மைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதீப்தத்தா,“இந்திய பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை ஒன்றிய மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று வருவதின் மூலம் கார்ப்ப ரேட் நிறுவனங்களின் காவலனாக பாஜக அரசு செயல்படுகிறது”என்று கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தற்போது மின்சாரத்தை விற்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் முதலில் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சாரத்துறையை அதானி போன்ற பகாசுர நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  மக்களின் அத்தியா வசிய சேவை பிரிவில் உள்ள மின்சாரம் தனி யாரிடம் சென்றால் ஊழி யர்கள் மட்டும் பாதிப்ப தில்லை, ஒட்டு மொத்த இந்திய மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எச்சரித்தார். எனவே இதை எதிர்த்து நாம் மக்களை திரட்டி போராட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மாநிலங்களின் மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர்கள், புதுச்சேரி மின்துறை ஊழியர் மற்றும் பொறியாளர் சங்கங்க ளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் ஆலோசனை களை முன்வைத்தனர்.