ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜி.கலியபெருமாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் புகழஞ்சலி
சிதம்பரம், அக்.12 - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜி.கே. அவரது படத்திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் புகழஞ் சலி செலுத்தினார். சிதம்பரம் அருகே செங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஜி.கலியபெருமாள் (87), கடந்த 50 ஆண்டு களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இளம் வயதி லேயே கட்சியில் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடித் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். கட்சியின் மாவட்டச் செயற்குழு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட இயக்கங் களில் சிறப்பாகப் பணி யாற்றிய இவர், கடந்த ஜன வரி 22ஆம் தேதி உடல் நலக்குறைவால் அவரது வீட்டில் காலமானார். இந்நிலையில், சிபிஎம் டெல்டா பகுதி சார்பில் அவருக்கு சிதம்பரத் தில் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் எஸ்.ராஜா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் பி.கற்பனைச் செல்வம், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஏ.செல்லையா முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பா ளராகக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஜி.கலியபெரு மாளின் உருவப்படத்தைத் திறந்துவைத்துப் பேசுகை யில், “கடந்த 50 ஆண்டுக ளுக்கு முன்பு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பட்டியல் சமூக மக்கள் தோளில் துண்டு, காலில் செருப்பு போட முடி யாத நிலையில், பட்டியல் சமூக மக்கள் பண்ணை அடி மைகளாகவும், அவர்களின் பிள்ளைகள் மாடு மேய்க்கும் நிலையிலும் இருந்தபோது, இந்த அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி, இன்று கிராமப்புறங்களில் சுதந் திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தவர் ஜி.கே. இந்தச் சுதந்திரக் காற்று சும்மா கிடைக்கவில்லை. இதற்குப் பின் செங்கொடி இயக்கத் தின் சிறப்புமிக்க வரலாறு உள்ளது. இது போன்ற தலை வர்களின் வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் படத்திறப்பு நிகழ்ச்சியைச் செங்கொடி இயக்கம் நடத்து கிறது” என்று கூறினார். “சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் பகுதியில் இவரது கால்பதிவு செய் யாத பகுதியே இல்லை. அதே நேரத்தில், இட ஒதுக்கீட்டைக் கேட்டு நடை பெற்ற சாலை மறியல் போரா ட்டம் ஒரு கட்டத்தில் பட்டியல் சமூக மக்களின் குடிசைகளை எரித்தும், அவர்களின் சொத்துக் களைச் சூறையாடும் நிலை மைக்குச் சென்றது. அப்போது பட்டியல் மக்க ளுக்குப் பாதுகாப்பு அரணா கச் செங்கொடி இயக்கம் நின்றது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். “ஜி.கே. மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவ ராகப் பொறுப்பேற்று, அப்பகுதியில் உள்ள மக்க ளுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்தார்” என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டச் செயலா ளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் பி.கருப் பையன், ஆர்.ராமச்சந்திரன், பி.தேன்மொழி, பழ.வாஞ்சி நாதன் உள்ளிட்டவர்கள் புகழஞ்சலி செலுத்தினார் கள். ஒன்றியச் செயலாளர் கள் ஏ.விஜய், காளி.கோவிந் தராசு, ஜி.ஆழ்வார், நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மல்லிகா, அம்சையாள் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் ஜி.கே. குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைத்துத் துறை ஓய்வூதியச் சங்க த்தின் மாநிலச் செயலாளர் ஜி.பழனி நன்றி கூறினார்.
