கை குழந்தைகளுடன் பழங்குடியின மக்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி வட்டத்தில் வசிக்கும் தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (செப்.9) பழங்குடியின இக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 233 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தினேஷ் குமார் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இதைத் தொடர்ந்து, கலைந்து சென்றனர்.