தமிழ்நாட்டில், 8 இலங்கை தமிழர் முகாம்களில் 772 புதிய வீடுகளை கானொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் விருதுநகர், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 8 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.44.48 கோடி செலவில் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடி செலவில் நீர் விநியோகம், சாலைகள், சுகாதார வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள 772 புதிய வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
