திருப்பத்தூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பத்தூர், ஜூலை 18 - திருப்பத்தூர் நகராட்சியில் பணியுரியும் து ப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை பல ஆண்டுகளாகியும் சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நகராட்சி அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிஐடியு திருப்பத்தூர் நகராட்சி தொழிலா ளர் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை யில் நடைபெற்ற போராட்டத்திற்கு சி.முரு கேசன், வி.சின்னதம்பி, கேகாவேரி, எம்.மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஜோதி துவக்கி வைக்க, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை மற்றும் துப்புரவு தொழி லாளர்கள் சங்க வேலூர் -திருப்பத்தூர் மாவட்ட தலைவர் மு.காசி நிறைவுரையாற்றி னார். சிஐடியு நகர கன்வீனர் சி.கேசவன், சங்க மாவட்ட செயலாளர் சரவணன், பொருளா ளர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மரணம் மற்றும் ஓய்வு பெற்ற 8 தொழி லாளர்களுக்கு புதிய ஓய்வூதிய பங்களிப்பு தொகையினை உடனே வழங்க வேண்டும், நிரந்த தூய்மை பணியாளர்களுக்கு ஜனவரி மாதத்தில் தரவேண்டிய சீருடை, காலணிகள், மாஸ்க், கையுறைகளை உடனே வழங்க வேண்டும், நிரந்தர தூய்மை பணியாளர்க ளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை உடனே வழங்க வேண்டும், ஓய்வு மற்றும் மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு சேம நலநிதியும் மற்றும் விடுப்பு ஊதியம் இதுநாள் வரை வழங்காததை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.