tamilnadu

img

மலையடிவார மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் சிபிஎம் தலைமையில் ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை

மலையடிவார மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் சிபிஎம் தலைமையில் ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை

திருவண்ணாமலை,செப்.15- திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் பல்லாயிரக்க ணக்கான மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் போளூர் சாலை பச்சை யம்மன் கோயில் பகுதியில் இருந்து செங்கம் சாலை ரமணர் ஆசிரமம் வரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மூன்று தலைமுறைகளுக்கு மேலாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு குடிநீர் இணைப்பு, வீட்டு வரி, மின்சாரம் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலையடிவாரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை அகற்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க வும், வரி விதிப்பை ரத்து செய்யவும், மின் இணைப்பை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வா கத்தின் மூலம் மலையடிவார குடியிருப்பு வாசிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்  பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பறி போகும் பதற்றத்தில் பல்லா யிரக்கணக்கான மக்கள் தவித்து வந்தனர். திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.வீரபத்திரன், மாநகர செயலாளர் எம். பிரகலாதன் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு, தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.மனுக் களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மக்க ளின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு தக வல் அளித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.