குடிநீர் திட்டங்களுக்கு ஏற்ப பணியாளர்கள் எண்ணிக்கை இல்லை!
ஒப்பந்ததாரர்களால் குடிநீர் தரம் குறைகிறது
தமிழக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கத்து டன் 1971 ஆம் ஆண்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது. பொதுப்பணித்துறையின் ஒரு பிரிவாக இயங்கிய குடிநீர் வழங்கல் பணிகளைப் பிரித்து, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இந்த வாரியத்தை 50 குடிநீர் திட்டங்களுடனும், 12 ஆயிரம் பணியிடங்களுடனும் தொடங்கி வைத்தார். வாரியத்தின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் கடும் உழைப்பின் பயனாக, தற்போது குடிநீர் திட்டங்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது. தனிநபருக்கு 120 லிட்டர் என்ற இலக்கையும் நெருங்கி வருகிறது. ஆனால் “வளர்ச்சி எங்கே, வீழ்ச்சி அங்கே” என்ற பழமொழியின் படி, குடிநீர் திட்டங்கள் 100 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப பணியிடங்களின் எண்ணிக்கையும் இயல்பாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நேர்மாறான சூழல் காணப்படுகிறது. ஆரம்பத்தில் 12 ஆயிரம் பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது இது சரிபாதியாக 6 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதிலும் வெறும் 3,500 பணியாளர்களே உண்மையில் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்களின் ஆதிக்கமும் ஊழியர் சுரண்டலும் அனைத்து குடிநீர் திட்டங்களின் பராமரிப்பும் இயக்குதலும் முற்றிலும் ஒப்பந்தகாரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இந்த திட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படாமல், சொற்ப ஊதியம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் மாநில காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ) மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொகைகள் கூட ஒப்பந்தக்காரர்களின் விருப்பப்படியும், பணியில் இல்லாத ஒப்பந்தக்காரர்களின் உறவினர்கள் பெயரில் செலுத்தப்படும் கொடுமை நடைபெறுகிறது. குடிநீரின் தரம் மற்றும் அதில் கலக்க வேண்டிய ரசாயனங்களை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட ஆய்வகங்களில் பல ஊழியர்கள் இல்லாமல் செயலற்ற நிலையில் உள்ளன. செயல்படும் சில ஆய்வகங்களில் நிரந்தர ஊழியர்கள் இல்லாமல் ஒப்பந்த ஊழியர்களே நியமிக்கப்பட்டு, அவர்களின் ஊதியமும் சுரண்டப்படுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தனியார்மயக் கொள்கைகள் காரணமாக குடிநீர் திட்டத் தயாரிப்பிற்கான சர்வே, நீர் பரிசோதனைக் கூடங்கள், தணிக்கைப் பிரிவுகள், பராமரிப்புப் பிரிவுகள் போன்ற முக்கியப் பிரிவுகள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக குடிநீர் திட்டப் பணிகளின் தரமும் குடிநீரின் சுகாதார நிலையும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனத்தின் முரண்பாடு தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒரு அரசு பொதுத்துறை நிறுவனமாகும். முன் மாதிரியான வேலையளிப்பவராக இருக்க வேண்டிய இந்த நிர்வாகம், தனியார் நிறுவனங்களை விடவும் மோச மான உழைப்பு சுரண்டலையும் ஊதிய சுரண்டலையும் நடைமுறைப்படுத்துகிறது. ஊழியர்களை 12 மணி நேரம் வார விடுப்பின்றி வேலை வாங்குவதை ஊக்குவிப்பது இதன் கொடுமையான வெளிப்பாடாகும். இந்த அநீதிகளைத் தடுக்கவும், குடிநீர் வழங்கும் பணி தனியாருக்குச் செல்லா மல் தடுக்கவும் தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) எண்ணிலடங்கா வழக்குகளை யும் போராட்டங்களையும் முன்னெடுத்து ள்ளது. வாரியத்தில் பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் பணியை நிரந்தரமாக்கவும் தொழிலாளர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையிலும் தொடர்ந்து வழக்குகள் நடத்தி வருகிறது. மக்களுக்கு அரசே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், வாரியத்தின் சொத்துக்களைப் பாது காக்கவும், தொழிலாளர் உரிமைகளைக் காக்கவும் தொடர்ந்து வீதிகளிலும் நீதிமன்றங்களிலும் போராடி வருகிறது. புதிய திசை காட்டும் திருவண்ணாமலை மாநாடு இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாடு திருவண்ணா மலை மாவட்டம், செய்யாறு நகரில் செப்டம்பர் 20-21 தேதிகளில் நடை பெறுகிறது. வாரியத்தின் பாதுகாப்பிற்கும், ஊழியர்களின் சட்ட மற்றும் சமூக பாது காப்பிற்கும் தீர்மானங்கள் இயற்றப்படும். இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்து அமைப்பு பாடுபடும். பொதுத்துறை நிறுவனங்களின் மீதான தனியார்மயம் தாக்குதலையும், தொழிலாளர் சுரண்ட லையும் எதிர்கொண்டு நிற்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் போராட்டம், மக்க ளுக்கு சேவையும் தொழிலாளர் நலனும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றியே தமிழக மக்களின் குடிநீர் உரிமையை உறுதி செய்யும்.