tamilnadu

img

தீக்கதிர் சந்தா வழங்கல்

தீக்கதிர் சந்தா வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மின்னரங்கம் இடைக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 30 தீக்கதிர் சந்தாக்களை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் இடைக்குழுச் செயலாளர் வி.சீனிவாசன் வழங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.தயாளன், செயலாளர் சி.திருவேட்டை, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் சேகரிக்கப்பட்ட 22 தீக்கதிர் சந்தாக்களை சிபிஎம்  மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் சங்கத்தின் துணைச் செயலாளர் பாஸ்கரன் வழங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, இ.சர்வேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் சேகரிக்கப்பட்ட 15 தீக்கதிர் சந்தாக்களை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் வழங்கினார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆட்டோ - டாக்சி தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சேகரிக்கப்பட்ட 14 தீக்கதிர் சந்தாக்களை சிபிஎம்  மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் வழங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன், செயலாளர் சி.திருவேட்டை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.