tamilnadu

img

கள்ளக்குறிச்சியில் தீக்கதிர் சந்தா வழங்கல்

கள்ளக்குறிச்சியில் தீக்கதிர் சந்தா வழங்கல்

கள்ளக்குறிச்சி, ஜூலை 22 -  கள்ளக்குறிச்சியில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22)  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந் தன் தலைமையில் நடைபெற்றது. இதில், 102 சந்தாக்களுக்கான தொகையை மாவட்ட குழு சார்பாக தீக்கதிர் பொது மேலாளர் என்.பாண்டியி டம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், இ. அலமேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.வி.ஸ்டாலின் மணி, எம்.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர்கள் வே.ஏழுமலை, ஜெ.ஜெயக்குமார், வி.ரகு ராமன், டி.மாரிமுத்து, வி.பழனி, எஸ். சிவாஜி, பி.ஸ்டாலின், கே.ஆனந்தராஜ், பால கிருஷ்ணன், எம்.ஏழுமலை, மின்னரங்கம் கே.விஜயகுமார், சீனிவாசன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, சிபிஎம் முதுபெரும் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி சிக்னல் அருகில்  அமைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு தலைவர்கள்  மலர் தூவி அஞ்சலி செலுத்தி னர். இதில் தீக்கதிர் பொது மேலாளர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், குட்டி.ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வி.ஸ்டாலின்  மணி, கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் வே.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்ட னர்.