தியாகதுருகத்தில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி, செப்.29- கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகத்தில் உள்ள தணமூர்த்தி தொழில் கல்வி நிறுவனம் ஐ.டி.ஐ. பள்ளியில், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் தமிழ் கலை இலக்கியச் சங்கமும், கள்ளக் குறிச்சி மாவட்ட உலகத் திருக்குறள் கூட்ட மைப்பும் இணைந்து திங்கட்கிழமை முப்பெரும் விழா நடத்தின. இவ்விழாவில் டாக்டர் இராதா கிருஷ்ணன் பிறந்தநாள் விழா, கப்ப லோட்டிய தமிழன் வ.உ.சிதம்பர னார் பிறந்தநாள் விழா, கதம்பம் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கான ஆசிரியர் சிகரம் விருது வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. இவ்விழாவுக்கு பழனிவேல் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் கோமுகி மணியன், தமிழ் சங்கம் தலைவர் அருணா, தொல்காப்பியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாநிதி வரவேற்றார்.
