உச்சநீதிமன்றத்தில் திங்களன்று (அக் 6) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பொன்னேரி சார்பு நீதிமன்றத்தின் எதிரே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.காளமேகம் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர்கள் ஐசக் சாமுவேல், நெடுஞ்செழியன், ராஜா, பார்த்தசாரதி, மாசிலாமணி, விக்னேஷ், ஜி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன், லாயர் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் இருந்து வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
