மனிதநேயம் விதைத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி கலைப்பயணம்
கோவை, ஆக.22– ‘சாதியம் தகர்ப்போம், மனிதம் காப் போம்’ என்கிற கருத்தியலை முன் வைத்து சென்னைக்கலைக்குழு மேற் கொண்டு வரும் கலைப்பயணம் வெகு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் 5ஆவது மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற உள் ளது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக உடனுக்குடன் களம் காணும் இயக்க மாய் இருக்கிற, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதியம் தகர்ப்போம், மனி தம் காப்போம் என்கிற கருத்தை முன் வைத்து மாநிலம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பிரச்சாரத்தை மேற் கொண்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, நாடகவிய லாளர் பிரளயன் தலைமையிலான சென்னை கலைக்குழுவினர், கலைப் பயணம் மூலம் நவீன வீதி நாடகத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 15 ஆம்தேதி துவங்கிய இந்த கலைக்குழு பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற் கொண்டு, வியாழனன்று கோவை வந்த டைந்தது. கோவையில், சிங்காநல்லூர், கூத்தாண்டவர் கோவில் மைதானம், பீள மேடு ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாடகம், பாடல்கள் என கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மனிதத்தை முன்னிருத்தி நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னதாக, இந்த கலைப்பய ணத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.மகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் த.நாகராஜ், பொருளாளர் சுப்பிரமணி, புயல் கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் மார்க்சிஸ்ட் கட்சியின், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.தெய்வேந்தி ரன், வி.சுரேஷ், பீளமேடு நகரச் செயலா ளர் அ.மேகநாதன், சிங்கை நகரச் செய லாளர் மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் வரவேற்றனர். சேலம் இதேபோன்று, சேலம் ஜங்ஷன், உழவர் சந்தை அருகே வெள்ளியன்று சென்னை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். கலை நிகழ்ச்சிகளை அங்கிருந்தவர்கள் கண் கொட்டாமல் பார்த்து ரசித்தனர்.