பாலஸ்தீனத்தில் தொடர்ந்து இனப்படுகொலை போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் அரசு உடனே போரை நிறுத்தக்கோரியும், அப்பாவி குழந்தைகள் பெரியவர்கள் என மனிதநேய மின்றி இனவெறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலையும் அதற்கு துணை போகும் அமெரிக்க அரசையும் கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி. வேலு தலைமையில் செயலாளர் எம்.ஆறுமுகம்,முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி,சிபிஎம் கள்ளக்குறிச்சி வட்டச் செயலாளர் வே.ஏழுமலை, ஒன்றியத் தலைவர் கே.செல்வம்,ஒன்றியச் செயலாளர் மாயகிருஷ்ணன்,ஒன்றியக் குழு உறுப்பினர் சுதா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜி.ஜெயக்குமார் தலைமையில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் பி.முருகன், துணைச்செயலாளர்கள் எம்.முத்துவேல், எம்.யுகந்தி, ஒன்றிய நிர்வாகிகள் கோலியனூர் எம்.மும்மூர்த்தி, விக்கிரவாண்டி எம்.அய்யனார், காணை எம்.செல்வி, கண்டமங்கலம் கௌரி, திண்டிவனம் டி.மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.