tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தீஒமு கலைப் பிரச்சாரம்

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தீஒமு கலைப் பிரச்சாரம்

திருவண்ணாமலை, ஆக. 23- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 5வது மாநில மாநாடு ஆக.30 செப். 1 ஆகிய தேதிகளில் மயிலாடு துறையில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டை முன்னிட்டு, சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் உள்ளிட்ட அம்சங்களுடன் சென்னை கலைக்குழு சார்பில் மாநிலம் தழுவிய பிரச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னை கலைக்குழுவின் சார்பில் பிரளயன் தலைமையில் திரு வண்ணாமலை பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமையன்று (ஆக.23) கலை நிகழ்ச்சி, நாடகங்கள் நடை பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் புயல் கிராமிய கலைக்குழு கலைஞர்களு டன், இசை கலைஞர்கள் கவின்மலர், மரிய டேவிட், கதிர் விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாநகர செயலாளர் எம்.பிரகலாதன், தீஒமு மாவட்ட செய லாளர் எஸ். ராமதாஸ், வழக்கறிஞர் எஸ். அபிராமன், வட்டார செயலாளர் அப்துல் காதர், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி. ஆனந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், விவசாயத் மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, விதொச மாவட்டச் செயலாளர் பி.சுப்பிர மணியன், ததீஒமு மாவட்டத் தலை வர் வே.ஏழுமலை, ததீஒமு மாவட்டச் செயலாளர் டி.எஸ்.மோகன், மாநிலக்குழு வி. ராஜா, மாவட்டப் பொருளாளர் கே.பாஸ்கர், மாநில துணைத் தலைவர் ஏ.நடேசன், மாநிலத் துணைத் தலைவர் எம்.பி.மன்னன், மாநிலத் துணைத் தலைவர் அ.பா.பெரியசாமி, மாநில துணை செயலாளர் மு.சிவக்குமார், மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.