tamilnadu

img

சாலையோர வியாபாரிகளை தன்னிச்சையாக மாநகராட்சி அகற்றக் கூடாது

சாலையோர வியாபாரிகளை தன்னிச்சையாக மாநகராட்சி அகற்றக் கூடாது

சிஐடியு மத்திய சென்னை மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 31 - சாலையோரா வியா பாரிகளை தன்னிச்சையாக அகற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்று சிஐடியு மத்திய சென்னை மாவட்ட மாநாடு வலி யுறுத்தி உள்ளது. சிஐடியு 2வது மாவட்ட மாநாடு ஆக.30-31 தேதிகளில் கீழ்பாக்கத்தில் நடைபெற்றது. மாநாட் டில், சாலையோர வியா பாரிகளுக்கான நகர விற்ப னைக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். அனை வருக்கும் அடையாள அட்டை வழங்குவதோடு வியாபாரம் செய்யும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். சென்னை துறை முகத்தில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரந்தர முறை யில் நிரப்ப வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் உருவாக்க வேண்டும். தையல் நல வாரியத்திற்கு தனி நிதியை ஏற்படுத்த வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்ட ணத்தை உயர்த்துவதோடு, ஆட்டோ செயலியை அரசே உருவாக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் ஆட்டோ நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும், காத்திருப்பு போராட்டம் நடத்தும் போக்குவரத்து தொழிலாளர்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்துவதோடு, மின்சார பேருந்துகளை அரசே இயகக வேண்டும். தையல் தொழிலாளர் நலவாரியத்திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும், துப்புறவு பணியை தனியார்மயமாக்க கூடாது, தூய்மைப் பணி யாளர்களக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை முறைப் படுத்த வேண்டும், சென்னை குடிநீர் வாரி யத்தில் பணிநிரந்தரம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் தொழிலாளர்களை நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், ஐசிஎப்-ல் தனியார்மய நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாடு மாநாட்டிற்கு, மாவட்டத் தலைவர் எம்.தயாளன் தலைமை தாங்கினார் திருவல்லிக்கேணியில் இருந்து கொண்டுவரப்பட்ட ம.சிங்காரவேலர் நினைவுச் சுடரை எஸ்.கே.முருகேஷ் பெற்றுக்கொண்டார். ஆயிரம் விளக்கு பகுதியி லிருந்து எடுத்து வரப்பட்ட பகத்சிங் நினைவுச் சுடரை ஆர்.அருள்குமார் பெற்றுக் கொண்டார். ஓட்டேரியிலிருந்து ஏந்தி வரப்பட்ட வி.பி.சிந்தன் நினைவுச் சுடரை டி.நரேந்திரனும், சேத்துப்  பட்டிலிருந்து எடுத்துவரப் பட்ட மைதிலி சிவராமன் நினைவுச் சுடரை வி.செந்தில்  குமாரும் பெற்றுக் கொண்டார். துறைமுகத்தி லிருந்து கொண்டு வரப்பட்ட வெங்கட்ராமணா நினைவுச் சுடரை எஸ்.பால சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். ஐ.சி.எப்.லிருந்து எடுத்துவரப்பட்ட எம்.ருத்ர குமார் நினைவுச் சுடரை பி.சுந்தரமும், பல்லவன் சாலையிலிருந்து ஏந்தி வரப்பட்ட எஸ்.பக்த வச்சலு நினைவுச் சுடரை பி.சீனிவாசலுவும், 99வது வட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஆர்.குப்புசாமி நினைவுச் சுடரை வி.செங்கேணியும் பெற்றுக் கொண்டார். அண்ணாநகரில் இருந்து ஏந்திவரப்பட்ட மாநாட்டு செங்கொடியை பேபி சகிலா பெற்றுக் கொண்டார். செங்கொடியை மாவட்ட துணைத் தலைவர் எம்.சந்திரன் ஏற்றினார். துணைச் செயலாளர் பி.சுந்தரம் வரவேற்க, அஞ்சலி தீர்மானத்தை துணைத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் வாசித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை - அமைப்பு அறிக்கை மாவட்டச் செயலாளர் சி. திருவேட்டையும், வரவு-செலவு அறிக்கையை பொரு ளாளர் எஸ். பாலசுப்பிர மணியமும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர்கள் வி.குப்புசாமி (வட சென்னை), ஜி.செந்தில்  குமார் (தென்சென்னை) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைப் பொதுச் செய லாளர் எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினார். ஏ.ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு 45 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலை வராக எஸ்.பாலசுப்பிர மணியம், செயலாளராக எஸ்.கே.முருகேஷ், பொருளாளராக பி.சுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.