பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்
வாலிபர் சங்க பகுதி மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 13 – அயனாவரம் மார்க்கெட் மாநகராட்சி பள்ளி, சிங்காரம்பிள்ளை பள்ளி ஆகிய வற்றின் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. வாலிபர் சங்க வில்லிவாக்கம் பகுதி 24 வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 13) வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசு உதவி பெறும் சிங்காரம்பிள்ளை பள்ளி நிலத்தை மீட்ப தோடு, பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண் டும், அகத்தியர் நகர் வழியாக செல்லும் ஓட்டேரி நல்லா கால்வாயை தூர்வார வேண் டும், வில்லிவாக்கத்தில் 24 மணி நேர அரசு மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும், அயனாவரம் கே.எச். சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதி தலைவர் ஏ.டேவிட் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏ.பிரிய தர்ஷினி எம்.சி., சங்கத்தின் கொடியை ஏற்றி னார், துணைத் தலைவர் ஆர்.கார்த்திக் வரவேற்றார், பகுதிக்குழு உறுப்பினர் ஜே.டோனி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார், மாவட்டத் தலைவர் ஜே.பார்த்திபன் தொடக்க உரையாற்றினார். பகுதிச் செயலாளர் ஜே.பி.யூஜிக்பர்க் வேலை அறிக்கையும், பொருளார் என்.நரேஷ் வரவு செலவு அறிக்கையும் சமர்பித் தனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிரைவுரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் கே.பி.நிகில்தேவ் நன்றி கூறினார். 10 பேர் கொண்ட பகுதி குழுவின் தலை வராக ஏ.டேவிட், செயலாளராக கே.பி.நிகில்தேவ், பொருளாளராக ஜே.டோனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.