8 வது ஊதிய குழு அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளியன்று (ஆக 29) மாவட்ட செயலாளர் வே. பர்சிலா வான சாஸ்திரி தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் மு. ஆனந்தபாபு, மாவட்ட தணிக்கையாளர் சோ. கோடீஸ்வரி கலந்து கொண்டனர்.தொடர்ந்து, ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் மாவட்டத் துணைத் தலைவர் சு. சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.