tamilnadu

img

தமிழ் இணைய மாநாடு

சென்னை,செப்.20- அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்த மம்) இணைந்து நடத்திய தமிழ் இணைய  மாநாடு -2019 கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள விவேகானந்தா கலை யரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில உயர் கல்வித்துறை  அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு தமிழ் இணைய மாநாட்டினை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்து, மாநாட்டு மலர் மற்றும் கைப்பேசி செயலி ஆகியவற்றை வெளியிட்டுச் சிறப்பு ரையாற்றினார். தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் அண்ணா பல்க லைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் மி.கி. சுரப்பா தலைமையுரையாற்றினார். தகவல் தொழில் நுட்பத்துறை, முதன்மைச் செயலா ளர் டாக்டர் சந்தோஷ் பாபு  உத்தமம் அறிவுரை யாளர் பேராசிரியர் பொன்ன வைக்கோ ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் ராஜீவ் சங்கல்  இவ்விழாவில் மொழி தொழில்  நுட்பத்தின் குறிக்கோள் மற்றும் எதிர்கால வழி முறை குறித்து விளக்கவுரையாற்றினார். முன்னதாக, உத்தமம் தலைவர் சுப்பிர மணியம் வரவேற்புரை  ஆற்றிட, மாநாட்டின்  உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழுத் துணைத் தலைவர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சனி பார்த்தசாரதி நன்றி கூறினார்.