மணல் குவாரியில் உயிர் இழந்த மாணவர்கள்: நிவாரணம் கேட்டு சிபிஎம் போராட்டம்
சிதம்பரம், செப். 9 - சிதம்பரம் அடுத்த பி.முட்லூர் எம்ஜி ஆர் சிலை அருகே உள்ள தச்சக்காடு கிராமம். இது பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட் பட்டது. கடந்த 30ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இலியாஸ், சுல்தான் ஆகிய இருவரும் சவுடு மணல் குவாரியில் தேங்கி நிற்கும் மழை நீரில் குளித்தபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். இந்த மணல் குவாரியில் அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததால் இந்த சோக நிகழ்வு ஏற்பட்டது. எனவே, உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியம் சிபிஎம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, உயிரிழப்புக்கு காரண மான மணல் குவாரி உரிமையாளர் மட்டு மல்லாமல் அதற்கு துணை போன அனைத்து அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளை முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் ஏ.விஜய் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அம்சை யாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் என். ஜெயசீலன், பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் வி.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செய லாளர் ஜி. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.