விழுப்புரம் சிலம்பம் விளையாட்டில் மாணவர்கள் கின்னஸ் சாதனை
விழுப்புரம், அக்.8- திருநெல்வேலியில்நடைபெற்ற சிலம்பம் சுற்றும் கின்னஸ் சாதனை போட்டியில் விழுப்புரம் மாவட்டமாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். நெடுவயலுார்வார் பார் சிலம்பம் மற்றும் தென்காசி குருகுலம் சித்ராஜித் சிலம்பம் இணைந்துஅக்டோபர் 4ம்தேதி இந்த சிறப்பு போட்டியை நடத்தினர்.பனையபுரம்சஞ்சய் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் துளிர் சிறப்பு பள்ளி சார்பில் 6மாணவர்கள்பங்கேற்றனர். பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ரஞ்சித்குமார் (14), ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்கோகுல் (14), அப்புசிவபாலன் (12), அப்புசிவா கவுசிக் (9), பாப்பனப்பட்டுஅரசு நடுநிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீமன் (12) மற்றும் விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லூரி மாணவரும்பயிற்சியாளருமான சஞ்சய் (19) ஆகியோர்தொடர்ந்து 2 மணிநேரம் 25 நிமிடங்கள்சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்தனர். நிகழ்ச்சியாளர்கள் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். பயிற்சியாளர் சஞ்சய், துளிர் சிறப்பு பள்ளி நிறுவனர் வடிவேலு,தாளாளர் தனலட்சுமி,சிறப்பு ஆசிரியர்முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சாதனை படைத்தமாணவர்களைப் பாராட்டினர்.