அடிப்படை வசதிகள் கேட்டு சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்
சிதம்பரம், செப்.18- சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இரு வேலை பாடப்பிரிவாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு, மாண வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரவும், அதனை முறையாக பராமரிக்க வலி யுறுத்தி கல்லூரி வளாகத்தில் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாணவர் சங்க கல்லூரி கிளைச்செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சிவநந்தினி, மாவட்டக் குழு உறுப்பினர் கனிமொழி, கல்லூரி மாணவர்கள் மகேந்திரன், காவியா, சுவாதி, வெற்றி உள்ளிட்ட ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து கல்லூரி முதல்வர், பேரா சிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து, போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது.