சென்னை உயர்நீதிமன்றக் கிளை புதுச்சேரியில் அமைத்திடுக! அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்
புதுச்சேரி, செப்.29 - சென்னை உயர் நீதிமன்றக் கிளையை புதுச்சேரியில் அமைக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு கூட்டம், புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மே ளனத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முத்து அமுதநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொரு ளாளர் கோச்மின், தேசிய குழு உறுப்பி னர்கள் இளங்கோ, சம்கிராஜ், சரவணன் உள்ளிட்ட திரளான மாநில குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். தீர்மானங்கள் சென்னை உயர்நீதிமன்ற கிளையை புதுச்சேரியில் அமைக்க வேண்டும். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகள் சிறப்புச்சட்டம் கொண்டு வர வேண்டும். நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். வழக்க றிஞர்களின் சேமநலநிதியை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்ட த்தில் நிறைவேற்றப்பட்டன.
