ஜூலை 25-இல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
சென்னை, ஜூலை 16- அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூலை 25 ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்கு நர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் முன்னேற்றத் துக்காக ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும். இந்த கல்வியாண்டின் முதல் கூட்டத்தை ஜூலை 25 ஆம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் மற்றும் அதை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து பெற்றோருடன் ஆலோசித்து உரிய முடிவுகள் எடுக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக முன்னாள் மாணவர்களிடம் பெறப்பட்ட பொருள் மற்றும் தொகையை ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதித்து சாதகமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலாஜா ரோடு கிளையில் டிஆர்இயு கொடியேற்றம்
ராணிப்பேட்டை, ஜூலை 16 - தெற்கு ரயில்வே வாலாஜா ரோடு கிளை சார்பாக புதுப்பிக்கப்பட்ட டிஆர்இயு கொடி கம்பத்தில் செவ்வா யன்று (ஜூலை 15) சென்னை டிவிஷன், டிவிஷன் செயலாளர் கே. சீனிவாசன் கொடியேற்றி வைத்தார். இதில் சிஐடியு துணைத் தலைவர் என். காசிநாதன், எஸ்எம்ஆர் வி. பிரகாஷ், டிஆர்இயு ஜி. சுவாமிதாஸ், வாலாஜா ரோடு கிளை, காட்பாடி செயலாளர் வி. செல்வகுமார், உதவி செயலாளர் எ. ஸ்டாலின் ஜான், முன்னாள் ஸ்டேஷன் மாஸ்டர் பிரபா சந்தர், ஆர். செல்வம், ரயில்வே ஓட்டுநர் இ. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.'
ஊராட்சி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம்
சென்னை, ஜூலை 16- கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிகாரம் வழங்கி யுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்க ளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.