tamilnadu

img

3 மாத சம்பளத்தை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

3 மாத சம்பளத்தை வழங்கக் கோரி  தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கடலூர், ஆக. 14- 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து கடலூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதனைச் சுற்றி யுள்ள பல்வேறு ஊராட்சிகளும் மாநகராட்சி யுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்த நிலையில், மாநக ராட்சியின் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவ தில்லை என்று குற்றச்சாட்டும் தூய்மைப் பணியாளர்கள் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர். கடந்த மூன்று மாதகாலமாக அவர்க ளுக்குச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து கடலூர் - புதுச்சேரி சாலை யில் தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற னர். அவர்களை உடனடியாகத் தடுத்து நிறுத்திய போலீசார் மாநகராட்சி அலு வலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் மாநகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராத நிலையில் தாங்கள் சிரமப்பட்டுப் பணி செய்யும் நிலையிலும் தங்களுக்கு மூன்று மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் ஊதியம் வழங்கும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுடன் கடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரூபன் குமார் தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர்.